உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமடைந்த மேன்ஹோல்களால் பரிதவிப்பு

சேதமடைந்த மேன்ஹோல்களால் பரிதவிப்பு

விருதுநகர்: விருதுநகரில் உட்தெருக்களில் சேதமடைந்த மேன்ஹோலால் குடியிருப்போர் பதற்றத்துடனே வாகனங்களை ஓட்டுகின்றனர்.விருதுநகர் நகராட்சியின் 36 வார்டுகளில் பாண்டியன் காலனி, ஆத்துமேடு பகுதி தவிர்த்து மற்ற இடங்களில் பாதாளசாக்கடை வசதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகரின் மையப்பகுதிகளின் தெருக்களில் 50 மீட்டருக்கு ஒரு மேன்ஹோல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இதில் பல தெருக்களில் மேன்ஹோல்கள் சேதமடைந்து மிக மோசமான நிலையில் உள்ளன. இளசுகள் டூவீலரை வேகமாக ஓட்டும் போது இன்னும் சேதம் அடைகின்றன. ஆட்டோக்கள் வந்து செல்லும் போது எடை காரணமாக நொறுங்குகின்றன. இவ்வாறு அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி, பாத்திமா நகர் தந்தி மரத்தெரு, அல்லித்தெரு, கட்டபொம்மன் தெரு, சாமியார் கிணற்று தெரு போன்ற பகுதிகளின் உட்தெருக்கள், அதை சுற்றியுள்ள தெருக்களில் மேன்ஹோல்கள் சேதம் அடைந்துள்ளன.உட்தெருக்களில் சேதமடைந்த மேன்ஹோல்களை சீரமைக்க கோரி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். குடியிருப்போர் பதற்றத்துடனே வாகனங்களை இயக்குகின்றனர். நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி