உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காரியாபட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற கெடு

காரியாபட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற கெடு

காரியாபட்டி : காரியாபட்டியில் ரோட்டோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் கெடு விதித்துள்ளனர். காரியாபட்டியில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இடவசதியின்றி முக்கு ரோடு, கள்ளிக்குடி, மதுரை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பஸ்களை நிறுத்துகின்றனர். பயணிகள் அங்கும் இங்கும் அலைந்து பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் வாறுகால், பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க ரோட்டோரத்தில் காய்கறிகடைகள், தள்ளுவண்டி, மினி வேன் உள்ளிட்ட திடீர் கடைகள் முளைத்துள்ளது, கடைக்காரர்கள் ரோடு வரைக்கும் செட் அமைத்து ஆக்கிரமித்து போக்குவரத்திற்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தி வருகின்றனர். முக்கு ரோட்டில் இருந்து பஸ் ஸ்டாண்டிற்கு செல்வதற்குள் படாதபாடு படுகின்றனர்.இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினருக்கு கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் ஜூன் 18க்குள் அகற்றிக் கொள்ள வேண்டும். அகற்றாவிட்டால் ஜூன் 20ல் ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்படும். அதற்கான செலவு தொகை கடைகாரர்களிடம் வசூலிக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறையினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று பேரூராட்சி சார்பாக இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சாலையோர காய்கறி வியாபாரிகள் உழவர் சந்தையிலும், பழ வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகம் எதிரில் உள்ள இடத்திலும் வியாபாரம் செய்யவும், வேன், மினி வேன், டூரிஸ்ட் வேன் உள்ளிட்ட வாகனங்கள் திருச்சுழி கள்ளிக்குடி ரோட்டில் நிறுத்திக் கொள்ள இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு இன்றி கடைகள், வாகனங்களை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்