உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடியிருப்போர் குரல்

குடியிருப்போர் குரல்

சாத்துார் : சாத்துார் போக்குவரத்து நகரில் தெருக்களில் ரோடு, வாறுகால் பஸ் வசதி இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.சாத்துார் ஊராட்சி ஒன்றியம் அயன்சத்திரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட போக்குவரத்து நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் தலைவர் பசீர்உசேன்,உதவி தலைவர் ெசல்லத்துரை பாண்டியன், செயலாளர் கிருஷ்ணமூர்த்திபொருளாளர் சுப்பிரமணியன், துணைச் செயலாளர் பரசுராமன்.அப்துல்சலீம், தனசேகர், பரசுராமன் ஆகியோர் கலந்துரையாடிய போது கூறியதாவது:நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ரோடு தெருவிளக்கு ,வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.தெருக்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் ரோடு போடப்பட்டு வாறுகால் கட்டப்பட்டது. தற்போது தார் ரோடு முழுவதும் சேதமடைந்து கரடு முரடான மண் சாலையாக மாறிவிட்டது. வாறுகாலும் இடிந்து விட்டது. சிறிய மழை பெய்தாலும் பள்ளத்தில் மழை நீரும் கழிவு நீரும் குளம் போல் தேங்கி விடுகிறது.பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் பள்ளி வேன்கள் மழைக்காலத்தில் தத்தளித்துச் செல்லும் நிலை உள்ளது.இருசக்கர வாகன ஓட்டிகள் மழைக்காலத்தில் வீடுகளுக்கு தங்கள் வாகனங்களை கொண்டு செல்ல முடியாமல் ரோட்டிலேயே நிறுத்திவிட்டு வீட்டிற்கு நடந்து செல்லும் நிலை உள்ளது.நகருக்கு அருகில் கரிமூட்டம் போடும் தொழில் செய்து வருகின்றனர். இரவு பகலாக கரிமூட்டம் போடுவதால் இதில் வரும் புகை காரணமாக குடியிருப்பு வாசிகள் கடும் அவதிபடுகிறோம். ஊராட்சி நிர்வாகம் அவர்களை வேறிடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகருக்குள் டவுன் பஸ்கள் வந்து செல்ல போக்குவரத்து அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.சாத்துார் நகருக்கு செல்ல ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் ஓடுவதால் ஆபத்தான நிலையில் நான்கு வழி சாலை பாலத்தின் மீது நடந்து நகருக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.போக்குவரத்து நகருக்கும் சாத்துாருக்கும் ஆற்றுக்குள் தரைமட்ட பாலம் அமைத்து தர வேண்டும். தேர்தல் சமயத்தில் நிச்சயம் தரைப்பாலம் அமைத்து தருவோம் என கட்சியினர் கூறுகின்றனர் வெற்றி பெற்ற பின்பு மறந்து விடுகின்றனர்.நகருக்குள் புதிய புதிய வீடுகள் உருவாகி வருகிறது. கழிவுநீர் செல்ல வாறுகால் இல்லாததால் குடியிருப்பு வாசிகள் சோக்பிட்டு போட்டு நிலத்திற்குள் கழிவு நீரை கடத்தி வருகின்றனர். காலி இடத்தில் கழிவுநீர் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி