உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மேட்டமலையில் சேதமடைந்த ரோட்டால் விபத்து அபாயம்

மேட்டமலையில் சேதமடைந்த ரோட்டால் விபத்து அபாயம்

சாத்துார் : சாத்துார் மேட்ட மலையில் சேதமடைந்த ரோட்டால் விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது.சாத்துார் மேட்ட மலை இ.குமாரலிங்கபுரம் செல்லும் ரோட்டில் ஓடையில் மண்சரிவு ஏற்பட்டதால் ரோட்டின் ஓரத்தில் பள்ளம் விழுந்துள்ளது.மேட்ட மலை இ.குமாரலிங்கபுரம் ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ரோட்டில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பி. எட்.. கல்லூரிகள் உள்ளன மேலும் முத்துராமலிங்க நகர் மற்றும் பட்டாசு ஆலைகள் பல செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்த ரோட்டில் அதிக அளவில் சிறிய மற்றும் கனரக வாகனங்கள் காலை முதல் இரவு வரை சென்று வருகின்றன.மேலும் எட்டூர் வட்டத்திற்கும் விருதுநகருக்கும் இரு சக்கர வாகனத்தில் பலர் இந்த ரோடு வழியாக சென்று வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த ரோட்டின் அருகில் உள்ள மழை நீர் ஓடையில் கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் ரோடும் இடிந்து ஓடையில் விழுந்தது.மண் ஏற்றி செல்லும் லாரிகள் கட்டடத்திற்கு தேவையான செங்கல் சிமெண்ட் ஏற்று செல்லும் லாரிகள் அதிக அளவில் இந்த பாதையில் சென்று வருவதால் ரோட்டில் விழுந்துள்ள பள்ளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனால் இந்த பகுதியில் வாகனங்கள் விபத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது.வாகனங்கள் கவிழ்ந்து உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக சேதமடைந்த ரோட்டை நெடுஞ்சாலை துறையினர் விரைந்து சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை