உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துார் ரோட்டில் மேவிய மணலால் விபத்து அபாயம்

சாத்துார் ரோட்டில் மேவிய மணலால் விபத்து அபாயம்

சாத்துார்: சாத்துார் மெயின் ரோட்டில் மேவியுள்ள மணலால் விபத்து அபாயம் உள்ளது.சாத்துார்-விருதுநகர்மெயின் ரோட்டில் சின்னப்பர் ஆலயம் முதல் சிதம்பரம் நகர் வரையிலான ரோட்டில் இருபுறமும் புழுதி மண் ரோட்டின் இருபுறமும் பரவியுள்ளது. மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளிலிருந்து மழைக்காலத்தில் ரோட்டில் ஓடும் மழை நீராலும் அடித்து வந்தமணல் ரோட்டில் பரவிஉள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் திடீரென பிரேக் போடும் போது மணலால் வாகனம்நிற்காமல் வழுக்கி கீழே விழுந்து பலர் காயம் அடைகின்றனர்.கடந்த காலங்களில நெடுஞ்சாலை பணியாளர்கள் மாதம் ஒருமுறை ரோட்டில் பரவியுள்ள புழுதி மண்ணை அகற்றி வந்தனர். தற்போது இந்த பணி பல மாதங்களாக நடைபெறவில்லை. இதனால் மெயின் ரோட்டில் புழுதி மண் பரவி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்கள்பலியாகும் அவல நிலை உள்ளது. மெயின் ரோட்டில் பரவியுள்ள புழுதி மண்ணை அகற்ற அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ