மேலும் செய்திகள்
வீணாகும் தாமிரபரணி குடிநீர் சீரமைக்க எதிர்பார்ப்பு
23 hour(s) ago
கல்லுாரியில் கருத்தரங்கம்
23 hour(s) ago
ராஜபாளையத்தில் அனுமன் ஜெயந்தி
23 hour(s) ago
அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை புறநகர் பகுதியில் டூவீலர்களில் செல்பவர்களிடம் கொள்ளையர்கள் வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி டூ வீலரை பறித்து செல்வதால் மக்கள் பீதியில் உள்ளனர்.அருப்புக்கோட்டை காந்தி நகர் சர்வீஸ் ரோடு, பைபாஸ் ரோடு வழியாக அந்தப் பகுதியில் உள்ள புறநகர், கிராமங்களுக்கு மக்கள் டூவீலர்களில் செல்வர். கூலி தொழிலாளர்கள் தங்கள் பணியை முடித்துக்கொண்டு இரவு 8:00 மணிக்கு காந்தி நகர் செல்வர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த வழியாக டூவீலரில் சென்ற ஒருவரை எதிரே டூவீலரில் வந்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரை விரட்டி விட்டு டூவீலரை பறித்து சென்றனர். நேற்று முன்தினம் இரவு 8:40 க்கு இதே போன்று டூவீலரில் சென்ற ஒருவரை மிரட்டி பறித்து சென்ற போது, அவர் அலறியதில் அந்த வழியாக வந்த போலீசார் கொள்ளையர்களை விரட்டியதில் அவர்கள் டூவீலர், கத்தியை போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.நகரில் இது போன்று டூவீலர் பறிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. நகரில் இரவு நேர ரோந்து, சிசிடிவி., கேமராக்கள் இருந்தும் செயல்படாமை போன்ற காரணங்களால் இது போன்ற திருட்டுக்கள், கொள்ளைகள் அடிக்கடி நடக்கிறது. - -
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago