உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம்: கிருஷ்ணசாமி

பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம்: கிருஷ்ணசாமி

விருதுநகர்:சிவகாசி செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 25 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் அரசு வழங்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் பலியாயினர். இந்த சம்பவம் நடந்த இரண்டு நாள்களில் நேற்று காலை நாரணாபுரத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்தது. அங்கு தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. பட்டாசு தொழிலும், தொழிலாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும். விதிமுறைகளை அமல்படுத்தும் கண்காணிப்பு அமைப்புகளில் நிலவும் ஊழலே இந்த விபத்துக்களுக்கு காரணம். மத்திய, மாநில, மாவட்ட நிர்வாக அனுமதி பெற்ற ஆலைகள் விதிமுறைகளை நுாறு சதவீதம் கடைப்பிடிக்க வேண்டும். மீறும் ஆலைகளின் உரிமம் ரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.விதிமீறல்களை கண்காணிக்க தவறிய அதிகாரிகளே விபத்துக்கு பொறுப்பேற்கக்கூடியவர்கள் என்ற முடிவை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். செங்கமலப்பட்டி வெடி விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் அரசு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி