கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
விருதுநகர் : விருதுநகர் ஸ்ரீவித்யா கலைக்கல்லுாரியில் தமிழ்நாடு பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில் கல்லுாரியில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழாநடந்தது. கல்வி குழும தலைவர் திருவேங்கட ராமானுஜ தாஸ் தலைமை வகித்தார்.கல்லூரி முதல்வர் கணேசன், அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் பேசினர். கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சார்ந்த 13 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை காசோலையாக வழங்கப்பட்டது. உடற்கல்வியியல் துறை ஆசிரியை ரமா பிரபா அவர்கள் நன்றி கூறினார்.