உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளிக் கல்லுாரி செய்திகள்

பள்ளிக் கல்லுாரி செய்திகள்

கல்லுாரி ஆண்டு விழாசிவகாசி பி.எஸ்.ஆர்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 7 ம் ஆண்டு கல்லுாரி நாள் விழா கொண்டாடப்பட்டது. பி.எஸ்.ஆர்., கல்வி குழுமம் இயக்குநர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி தலைமை வகித்தனர். கல்லுாரி முதல்வர் பாக்கிய சீமா ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். துணை முதல்வர் ஜெயபாலன் வரவேற்றார். பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வணிகவியல் துறை தலைவர் நன்றி கூறினார்.--------கருத்தரங்குசிவகாசி எஸ்.எப்ஆர்., மகளிர் கல்லுாரி கணிதவியல் முதுகலை, ஆராய்ச்சி துறை அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, ராஜபாளையம் ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் கணித சவால்கள் மற்றும் நாவல் பயன்பாடுகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு நடந்தது. முதல் நாள் அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, 2வது நாள் எஸ்.எப்ஆர்., மகளிர் கல்லுாரியில் நடந்தது. மதுரை காமராஜர் பல்கலை கணித துறை உதவி பேராசிரியர் லலிதாம்பிகை, இந்தோனேசியா டெக்னாலஜி பாண்டுங் நிறுவனம் பேராசிரியர் மக்த லேனாவால், டென்மார்க் வெஸ்ட்ஸ் ஜேலான்ட் தெற்கு கல்லுாரி பேராசிரியர் ஜாபரி, உட்பட பல்வேறு கல்லுாரி பேராசிரியர்கள் பேசினர். இணைய வழியில் பேராசிரியர்களின் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. மாநாட்டின் இணை செயலாளர் மைதீன் பிபி நன்றி கூறினார்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ