உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோட்டில் ஓடிய கழிவு நீர் வாகன ஓட்டிகள் அவதி

ரோட்டில் ஓடிய கழிவு நீர் வாகன ஓட்டிகள் அவதி

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் மாரியம்மன் கோயில் அருகே விருதுநகர் ரோட்டில் ஓடும் கழிவு நீரால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.சிவகாசி அருகே திருத்தங்கல் விருதுநகர் ரோட்டில் காளிமுத்து நகர் உள்ளது. இங்குள்ள தெருவில் வாறுகால் சேதம் அடைந்துள்ளது. மேலும் வாறுகாலில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை துார்வாரி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இதனால் அப்பகுதி குடியிருப்புகளில் கழிவு நீர் வாறுகாலின் வழியாக செல்ல வழியின்றி வாறுகாலை விட்டு வெளியேறி தெருவில் ஓடுகின்றது. தவிர இந்தக் கழிவுநீர் விருதுநகர் மெயின் ரோடு முழுவதும் செல்கின்றது. இதனால் இதனை கடந்து செல்கின்ற வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். கழிவு நீர் வாகனங்களால் அடிக்கப்பட்டு நடந்து செல்வோர் மீது தெறிக்கின்றது. மேலும் அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் ஏற்படுகின்றது. வாறுகாலை துார்வாரி கழிவு நீரை வெளியேறச் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி