ராஜபாளையம், : செப்பனிடப்படாத தெருக்கள், சாக்கடை அடைப்பு, நாய்கள் தொல்லை போன்ற பிரச்னைகளால் ராஜபாளையம் நகராட்சி 33வது வார்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.இவ்வார்டில் மாரியம்மன் கோவில் பின்புறம் மாப்பிள்ளை சுப்பையா தெரு, முகில் வண்ணம் பிள்ளை தெரு, 10 குறுக்குதெருக்கள் உள்ளன. குடியிருப்பு அருகே தொற்று நோய் பாதிப்பு நாய்கள் அதிகம் சுற்றுவதால் அச்சம் ஏற்படுகிறது. குறுகலான தெருக்கள் ஆக்கிரமிப்புகளால் ஆம்புலன்ஸ் கூட நுழைய முடியவில்லை.வாறுகால்களில் தேங்கும் கழிவுகளால் கொசு தொல்லை அதிகம் உள்ளது.பாதி சந்துகளில் ரோடு போடப்படவில்லை. பேவர் பிளாக் சிமெண்ட் ரோடு உயர்த்தி போட்டுள்ளதால் வீடுகள் தாழ்வாகி கழிவுநீர் புகுந்து விடுகிறது. குடியிருப்பு அருகே செல்லும் பிரதான கால்வாய் புதர் மண்டி மெயின் ரோட்டில் பாய்கிறது. சங்கரன்கோவில் ரோடு இணைக்கும் பகுதி பள்ளமாகி பாலம் கைப்பிடிச்சுவர் கம்பி உடைந்துஉள்ளதால் கழிவு நீர் பாலத்தில் தேங்குகிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனர். கழிவுநீர் தேக்கம்
குரு பாக்கியம், குடியிருப்பாளர்: துாய்மை பணியாளர்கள் வீட்டில் சேரும் கழிவுகளை வாங்குவதுடன் வாறுகால்களில் அடைத்துள்ள கழிவுகள் அகற்றாமல் செல்கின்றனர். தகுந்த இடைவெளிகளில் இவற்றை அகற்றி கொசு மருந்து பணிகள் மேற்கொண்டு சுகாதார கேட்டினை தவிர்க்க வேண்டும். பணிகள் சரியில்லை
தமிழ்ச்செல்வி, குடியிருப்பாளர்: தற்போது வரை பாதாள சாக்கடை, தாமிரபரணி குடிநீர் இணைப்பு பணி முறையாக நடக்கவில்லை. கழிவுநீர் வெளியேறுவதற்கு பதில் மழை நேரங்களில் வீடுகளுக்குள்துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. தீர்வு காண வேண்டும். தெரு பணி தொடங்குங்க
விஸ்வகுமார், குடியிருப்பாளர்: 20 சந்து தெருக்களில் 9 மட்டும் புதிதாகஅமைத்துள்ளனர். மற்ற பகுதிகளில் ரோடு பெயர்ந்து ஜல்லி கற்கள் வெளியேறி உள்ளதால் டூவீலரில் செல்பவர்கள், பாதசாரிகளுக்கு மேடு பள்ளம் தெரியாமல் வாகனங்களில் நிலை தடுமாறி மக்கள் பாதிக்கின்றனர். புதிய பாலம் வேண்டும்
சீதாலட்சுமி, குடியிருப்பாளர்: சங்கரன்கோவில் ரோடு முகில் வண்ணம் பிள்ளை இணைப்பு பாலம் ரோடு உயர்வால் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி பகுதியாக மாறிவிட்டது. பாலத்தடுப்பு கம்பிகள் சேதமடைந்து பாதுகாப்பின்றி உள்ளது. பாலம் கீழ் கழிவு நீர் அடைப்பதால் புதிதாக அமைக்க வேண்டும். நடவடிக்கைஎடுக்கப்படும்
அருள் உதயா, கவுன்சிலர்:புதிய பாலத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து குறை மின் அழுத்த பிரச்சனை சரிபடுத்தப்பட்டது.ஒப்பந்ததாரர்கள் தாமதிப்பதால் ரோடு தொடங்கவில்லை. சாக்கடை பணிகளில் பணியாளர் பற்றாக்குறை காரணம் கூறுகின்றனர். குறைகள் சரி செய்யப்படும்.