உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி ஆர்.எஸ்.ஆர்., பள்ளி மாணவி சாதனை

சிவகாசி ஆர்.எஸ்.ஆர்., பள்ளி மாணவி சாதனை

சிவகாசி:கோவாவில் யூத் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன் சார்பில் 7 வது தேசிய அளவிலான யோகா போட்டி நடந்தது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா, மேகாலயா மாநிலங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். சிவகாசி ஸ்போர்ட்டோனிக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்திய மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட சிவகாசி ஆர்.எஸ்.ஆர்., இன்டர்நேஷனல் பள்ளி 3ம் வகுப்பு மாணவி நக்சத்ரா, தேசிய அளவிலான யோகா போட்டியில் 10 வயதிற்குட்பட்டோர் தனி ஆசனா பிரிவில் முதல்இடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இவர் சர்வதேச அளவில்நடைபெறும் யோகா போட்டிக்கும் தேர்வாகியுள்ளார். சாதனை மாணவியை பள்ளி தலைவர் சண்முகையா, முதல்வர் முத்துலட்சுமி பதக்கம் அணிவித்து பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ