உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஆக.7ல் ஆடிப்பூர தேரோட்டம் ஜூலை 30ல் கொடியேற்றம்

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஆக.7ல் ஆடிப்பூர தேரோட்டம் ஜூலை 30ல் கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர்மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 30ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆக. 7ல் தேரோட்டம் நடக்கிறது.ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா ஜூலை 30 காலை 8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று இரவு 10:00 மணிக்கு பதினாறு வண்டிச் சப்பரவிழா நடக்கிறது. ஆக.3 காலை 10:00 மணிக்கு ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு 10:00 மணிக்கு ஐந்து கருட சேவையும், ஆக.5 இரவு 7:00 மணிக்கு கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார் சயன திருக்கோலமும், ஆக. 7 காலை 9:05 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. ஆக. 10 மாலை 6:00 மணிக்கு புஷ்ப யாகத்துடன் ஆடிப்பூரத் திருவிழா நிறைவடைகிறது.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட் ராமராஜா தலைமையில் அறங்காவலர்கள், கோயில் பட்டர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ