|  ADDED : ஏப் 27, 2024 03:56 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரை கள்ளழகர் சாற்றி  கொடுத்த பட்டு ஸ்ரீவில்லிபுத்துார்ர் ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது. சித்ரா பவுர்ணமியை  முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்  சூடி கொடுத்த மாலை, பட்டு, கிளி ஆகியவற்றை அணிந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். இதற்கு எதிர் சீராக கள்ளழகர் சாற்றி கொடுத்த பரிவட்டம்,  தகடி, உறுமால், பட்டு கயிறு ஆகியவை ஆண்டாளுக்கு சாற்ற கொடுக்கப்படும்.  அதன்படி கள்ளழகர் சாற்றி கொடுத்த மங்களப் பொருட்களுக்கு  நேற்று காலை ஸ்தானிகம் ரமேஷ் வீட்டில் சிறப்பு பூஜைகள் நடந்தது.பின்னர் இரவு 7:00 மணிக்கு அங்கிருந்து  மங்களப் பொருட்கள் வெள்ளிக் குறடு மண்டபத்தில் ஆண்டாளுக்கு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர்  வெங்கட் ராமராஜா தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலையத்துறையினர்  செய்திருந்தனர்.