உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு தேதி மாற்றம் மே 23, 24, 25ல் நடக்கிறது

ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு தேதி மாற்றம் மே 23, 24, 25ல் நடக்கிறது

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில்மே 17 முதல் மூன்று நாட்கள் நடக்கவிருந்த யானைகள் கணக்கெடுப்பு மே 23, 24, 25 தேதிகளில் நடக்கிறது.தமிழகத்தில் வனத்துறை சார்பில் ஆண்டு தோறும் மே மாதம் யானைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் வனத்துறையினர், தன்னார்வலர்கள், என்.ஜி.ஓ.க்கள், வன உயிரின கல்லூரி மாணவர்கள் பங்கேற்பது வழக்கம். கணக்கெடுப்பில் பங்கேற்போர்களுக்கு முதல் நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு எவ்விதம் யானைகள் கணக்கெடுப்பு செய்யப்பட வேண்டும் என துறை அதிகாரிகளால் விளக்கம் அளிக்கப்படும்.இதில் யானையின் கால் தடம், சாணம், நேரடியாக பார்த்தல் உட்பட பல்வேறு வழிகளில் யானைகள் எண்ணிக்கை கணக்கிடப்படும்.அதன்படி இந்த ஆண்டும் தமிழகத்தில் மே 17, 18, 19 தேதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட இருந்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக யானைகள் கணக்கெடுப்பு மே 23, 24, 25 தேதிகளில் நடக்க உள்ளது. இதில் வனத்துறையினர் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த யானைகள் கணக்கெடுப்பில் தமிழகத்தில் 2961 யானைகள் இருந்ததாக கண்டறியப்பட்ட நிலையில் நடப்பாண்டில் கூடுதலாக யானைகள் எண்ணிக்கை உயர்ந்திருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் 35 பீட்டுகளில் இம்முறை வனத்துறையினர் கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளனர். இதற்கான பயிற்சி வகுப்பு ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்க மையத்தில் புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாப்டூர் ஆகிய நான்கு சரக வனத்துறையினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை