உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு ஆலைகளில் விதி மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

பட்டாசு ஆலைகளில் விதி மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

சிவகாசி: பட்டாசு ஆலைகளில் விதி மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கூறினார்.சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.அப்போது அவரிடம் இறந்த தொழிலாளர்களின் உறவினர்கள், நீதிமன்ற உத்தரவு படி பட்டாசு ஆலை உரிமையாளர் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், இறுதிச் சடங்கிற்கு ரூ.50 ஆயிரம் என பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.அதன்பின் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலோடு இரு நாட்களில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு அறிவிக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்படும்.விதி மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஜுன் 4 க்குப் பிறகு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
மே 10, 2024 09:58

முதலில் தமிழக ரெவெனு அதிகாரிகள், தீ தவிர்ப்பு அதிகாரிகள் போன்றவர்கள் ரசாயன வெடிமருந்துக்கல் பற்றி சரியான ட்ரைனிங் எடுக்கவேண்டும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை