மேலும் செய்திகள்
அரசு கல்லுாரியில்அறிவியல் கண்காட்சி
01-Mar-2025
சிவகாசி : மாணவர்கள் ஏன் எதற்கு என்ற கேள்வி ஞானத்தோடு அறிவியலை படிக்க வேண்டும், என ஸ்ரீஹரிகோட்டா இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானி கிரகதுரை பேசினார்.சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் முதுநிலை இயற்பியல் ஆராய்ச்சி துறை சார்பில்தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடும்வகையில் கல்லுாரிகளுக்கு இடையேயான கூட்டு ஆசிரியர் குழு திட்டத்தின் மூலம் சந்திரயான் துகள் முடுக்கிகள் செர்ன் ஆய்வகம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். இயற்பியல் துறை துணை பேராசிரியர் விக்னேஸ்வரி வரவேற்றார். துறை தலைவர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். ஸ்ரீஹரிகோட்டா இந்தியவிண்வெளி ஆராய்ச்சி அமைப்பு சதீஷ் தவான் விண்வெளி மையம் துணை இயக்குனர் விஞ்ஞானி கிரகதுரை பேசுகையில், இன்றைய சூழலில் மாணவர்கள் ஏன் எதற்கு என்ற கேள்வி ஞானத்தோடு அறிவியலை படிக்க வேண்டும், என்று கூறியதோடு சந்திரயான் பற்றிய வெற்றி பயணத்தை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். விருதுநகர் செந்திகுமார அண்ணா நகர் கல்லுாரி இயற்பியல் துறை தலைவர் பிரத்வி குமாரன் பேசினார்.
01-Mar-2025