மேலும் செய்திகள்
பாண்டுகுடி ஊராட்சி அலுவலகம் திறப்பு
30-Aug-2024
சாத்துார் : சாத்துார் ஊராட்சி ஒன்றியம் புல்வாய் பட்டி ஊராட்சியில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் பணிகள் முடிந்தும் திறக்கப்படாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.புல்வாய்ப்பட்டி ஊராட்சி அலுவலகம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் கூரை சேதமடைந்து கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. எந்த நேரமும் இடியும் நிலையில் இருந்ததால் பழைய ஊராட்சி அலுவலக கட்டடம் இடித்து அகற்றப்பட்டு புதிய கட்டடம் கட்டப்பட்டது.ரூ 31 லட்சத்தில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டப்பட்டு பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இன்று வரை செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால் ஊராட்சி செயல் அலுவலர் ,தலைவர் அலுவலகத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ஊராட்சி செயலர் , தலைவரை பார்ப்பதற்கு மக்கள் அவர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.மேலும் கிராம சபை கூட்டத்தை திறந்து வெளியில் நடத்தி வருகின்றனர். பணிகள் முடிந்தும் ஊராட்சிஅலுவலகத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதில் அதிகாரிகள் சுணக்கம் காட்டுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.மேலும் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்கு உரிய வசதியின்றி தவிக்கும் நிலை உள்ளது. குடிநீர் சுகாதாரம் உள்ளிட்டபிரச்சனை குறித்து பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளமுடியாதநிலை உள்ளது.புல்வாய்பட்டி ஊராட்சியில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலக கட்டடத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
30-Aug-2024