உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்டத்தில் வெப்பத்தை தணித்த ‛கோடை மழை

மாவட்டத்தில் வெப்பத்தை தணித்த ‛கோடை மழை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் பகலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலை பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்தது.விருதுநகரில் காலை 8:00 மணிக்கு துவங்கிய வெயில் மதியம் 2:00 மணிக்கு அனல் காற்றுடன் உச்ச நிலை அடைந்தது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர். ஆனால் மாலை 4:00 மணிக்கு மேகமூட்டம் காணப்பட்டது. அதன் பின் மாலை 5:00 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்து பகலில் நீடித்த வெப்பத்தை தணித்தது.அதே போல அருப்புக்கோட்டை பகுதியில் மாலை 5:30 மணிக்கு துவங்கி அரை மணி நேரம் மழை பெய்தது. காரியப்பட்டி பகுதியில் மாலை 4:00 மணிக்கு மழை பெய்ய துவங்கி தொடர்ந்து சாரல் மழை பெய்தது. ராஜபாளையம், அதனை சுற்றிய பகுதிகளில் லேசான சாரல் பெய்தது.சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் காலையிலிருந்து நல்ல வெயில் கொளுத்தியது. மதியம் 3:00 மணிக்கு மேல் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் 3:30 மணிக்கு பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதில் விளாம்பட்டி செல்லும் ரோட்டின் அருக இருந்த மரம் வேரோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதனைக் தொடர்ந்து சிறிது நேரத்தில் மரம் அகற்றப்பட்டது. இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து கொளுத்திய வெயிலால் அவதிப்பட்ட மக்கள் மழை பெய்து வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.சாத்தூர் சுற்றுப்பகுதிகளில் நேற்று மதியம் மூன்று மணி அளவில் பலத்த சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. மேட்டமலையில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் ஊராட்சி அலுவலகம் எதிரில் உள்ள வேப்ப மரக்கிளை முறிந்து அங்கு நிறுத்தி இருந்தஇருசக்கரவாகனங்கள் மீது விழுந்தது.கடும் வெயிலுக்கு பிறகு பெய்த கோடை மழையால் சாத்துார் மற்றும் சுற்று பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கோடை மழையால் குளிர் காற்று வீசியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ