உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சூப்பர் ரிப்போர்டர் விசிட் செய்தி

சூப்பர் ரிப்போர்டர் விசிட் செய்தி

சாத்துார், : சாத்துார் அண்ணா நகரில் துார்வாராத வாறுகால், மூடிக்கிடக்கும் சுகாதார வளாகம் போன்றவற்றால் மக்கள் திண்டாடி வருகின்றனர். அண்ணா நகரின் ரோட்டுக்கு வடக்கு பகுதியில் உள்ள வீடுகள் பள்ளத்தில் உள்ளதால் சிறிய மழை பெய்தாலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது.வாறுகால் மீது ஆக்கிரமிப்பு செய்து கடைகள்போட்டு உள்ளனர். இதனால் வாறுகாலை சுத்தம் செய்ய முடியாத நிலை உள்ளது.அண்ணாநகர் நடுவில்செல்லும் இரண்டு ஓடைகளில் பக்கவாட்டு சுவர் இல்லை மேலும் ஓடைகள் உள்ளே முள் செடி புதர்போல் வளர்ந்து உள்ளது.இதன் காரணமாக கழிவு நீர் செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. மேலும் அண்ணா நகரில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் திறக்கப்படாமல் மூடி கிடக்கிறது. இதன் காரணமாக இப்பகுதியினர் திறந்த வெளியில் இயற்கை உபாதையை கழித்து வருகின்றனர். தெருவிளக்குகள் அடிக்கடி பழுதாவதால் நகர்ப்பகுதி இரவுநேரத்தில்இருள் சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது.

தண்ணீர் பிடிக்க முடியல

நாகேந்திரன், எலக்ட்ரீசன்:அண்ணாநகர் உப்புத் தண்ணீர் தொட்டியை சுற்றிலும் ஆக்கிரமித்து பெட்டிக்கடை அமைத்து உள்ளனர். உப்புத் தண்ணீர்பிடிக்க வரும் பெண்களுக்கு பாதையின்றி தவிக்கும் நிலை உள்ளது. ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி உப்பு தண்ணீர் பிடிக்க வசதி செய்து தர வேண்டும்.

சுகாதார வளாகம் தேவை

ராஜன், வியாபாரி: அண்ணாநகர் குருலிங்கபுரம் சென்ட்ரல் எக்ஸ்ன்ஸ் தெரு பகுதி மக்கள் சுகாதார வளாகம் இல்லாததால் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அண்ணா நகர் பகுதியில் கடைகள் அதிக அளவில் உள்ளது. கடையில் பணிபுரியும் பணியாளர்கள் இயற்கை உபாதையை கழிக்க ஓடைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.இங்கு மூடி கிடக்கும் சுகாதார வளாகத்தை திறக்கவும் கூடுதல் சுகாதார வளாகம் கட்ட வேண்டும்.

ஓடைகளை துார்வார வேண்டும்

முருகன், குடும்பத் தலைவர்: அண்ணா நகரில் 2 பெரிய ஓடைகள் உள்ளன. ஓடையில் இருந்து விஷ ஜந்துக்கள்குடியிருப்பு பகுதிக்குள் படையெடுத்து வருகின்றன. பெரிய மழை பெய்தால் ஓடை நிறைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. பக்கவாட்டு சுவர் கட்டவும் ஓடையை துார்வாரவும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ