| ADDED : ஜூன் 30, 2024 04:43 AM
சத்திரப்பட்டி, : சத்திரப்பட்டி அருகே 40 நாட்களுக்கும் மேல் தாமிரபரணி குடிநீர் சப்ளை இல்லாமல் மாணவர்கள் குடியிருப்பு வாசிகள் விலைக்கு வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. .ராஜபாளையம் அடுத்த சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், அய்யனாபுரம், மேலராஜகுலராமன் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு சங்கரன் கோவில் வழியே தாமிரபரணி குடிநீர் சப்ளை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 40 நாட்களுக்கும் மேல் இப்பகுதிக்கு சப்ளையாகும் குடிநீர் கண்மாய்க்கு செல்லும் பாலப் பணிகளால் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விலைக்கு வாங்கி உபயோகித்து வருகின்றனர். இத்துடன், சத்திரப்பட்டியில் 2000க்கும் அதிகமான மாணவர்கள் உள்ள அரசு பள்ளியில் குடிநீர் தேவையை சமாளிக்க வெளி ஆட்களிடம் ஸ்பான்சருக்கு கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து சத்திரப்பட்டி பால்கனி: முதுகுடி எஸ்.ராமலிங்காபுரம் ரோடு வாகைகுளம் கண்மாய் செல்லும் தரைப்பலத்தை மேம்பாலமாக மாற்றும் பாலப் பணிகளால் குழாய் சேதம் அடைந்தது. இதனால் வேறுவழியின்றி தண்ணீரை விலை கொடுத்து வாங்குகிறோம். பள்ளி தொடங்கி விட்டதால் இப்பகுதியில் உள்ள மாணவர்களின் நிலையை கருதி பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.