மேலும் செய்திகள்
இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் நோன்பு துவங்கியது
03-Mar-2025
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் ரம்ஜான் நோன்பை நேற்று முதல் முஸ்லிம்கள் துவக்கினர்.மாவட்டத்தில் முஸ்லிம்கள் ரம்ஜான் மாதத்தின் முதல் நோன்பை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:00 மணி முதல் மாலை 6:43 மணி வரை உணவருந்தாமல் இருந்தனர். மாலை நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கஞ்சியும், பேரீச்சம் பழமும் உட்கொண்டு நோன்பை திறந்தனர்.ரம்ஜான் நோன்பின் முதல் நாளான நேற்று விருதுநகரில் பெரிய பள்ளி வாசல், கல்பள்ளி வாசல் ஜமாத், சின்ன பள்ளி வாசல் ஜமாத் உள்பட அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது.இவை தவிர மாவட்டம் முழுவதும் சிவகாசி, ராஜபாளையம், அருப்புக்கோட்டை, சாத்துார், ஸ்ரீவில்லிபுத்துார், திருச்சுழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசதிக்கும் முஸ்லிம்கள் நோன்பை துவக்கினர்.
03-Mar-2025