மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
13 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
13 hour(s) ago
சிவகாசி : வெம்பக்கோட்டை ஒன்றியம் பேர் நாயக்கன்பட்டியில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.வெம்பக்கோட்டை ஒன்றியம் பேர் நாயக்கன்பட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவர்களுக்கு மானுார் குடிநீர் திட்டத்தின் மூலமாக ஊரில் உள்ள மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.தொடர்ச்சியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டாலும் குறைந்த நேரமே வருவதால் அனைவருக்கும் போதுமானதாக இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே பேரநாயக்கன்பட்டியில் கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.விஜயராஜன் ஊராட்சி துணைத் தலைவர், இங்குள்ள தொட்டி மூலமாக குடிநீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டாலும் போதுமானதாக இல்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பற்றாக்குறையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
13 hour(s) ago
13 hour(s) ago