உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நகராட்சியில் இடிதாங்கி பொருத்தும் பணி

நகராட்சியில் இடிதாங்கி பொருத்தும் பணி

விருதுநகர் : விருதுநகர் நகராட்சியில் இடிதாங்கி கம்பி பொருத்தும் பணி நடந்து வருகிறது.விருதுநகரில் கல்லுாரி ரோட்டில் உள்ள நகராட்சி பூங்காவில் காலை, மாலை நேரங்களில் பெரியவர்கள், கர்ப்பிணிகள் நடைப்பயிற்சி, தியானம், குழந்தைகள் பலரும் பெற்றோருடன் வந்து விளையாடி செல்கின்றனர்.இந்நிலையில் கோடை மழையில் ஏற்படும் இடி, மின்னல் தாக்கத்திலிருந்து பூங்காவிற்கு வருபவர்களை பாதுகாக்கும் வகையில் இடிதாங்கி பொருத்தும் பணியை நகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர். இந்த இடிதாங்கி பொருத்திய பின் இடி, மின்னல் ஏற்படும் சமயத்தில் பூங்காவில் யாராவது இருந்தால் அவர்களை தாக்கத்தில் இருந்து பாதுகாக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி