உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோடு, தெருவிளக்கு, வாறுகால் வசதிகளில்லை

ரோடு, தெருவிளக்கு, வாறுகால் வசதிகளில்லை

சாத்துார்: பேரையம்பட்டி ஊராட்சி மீனாட்சிபுரத்தில் ரோடு தெருவிளக்கு சாக்கடை வாறு கால் வசதி என்று மீனாட்சிபுரத்தில் மக்கள் அவதிப்படுகின்றனர்.சாத்துார் ஊராட்சி ஒன்றியம் பேரையம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சிபுரத்தில் முறையான ரோடு, வாறுகால், தெருவிளக்கு வசதி இன்றியும் மக்கள் அவதிப்படுகின்றனர். மீனாட்சிபுரம் புது காலனி அருந்ததியர் காலனி மீனாட்சிபுரம் பகுதிகளில் புதியதாக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.வீடுகளுக்கு செல்லும் பாதை மண் பாதையாக உள்ளதால் மழைக்காலத்தில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தெரு விளக்குகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளது. தேவையான இடங்களில் மின்கம்பம் இருந்தும் தெருவிளக்கு அமைக்கப்படாததால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மீனாட்சிபுரத்தில் நடுத்தெரு, கிழக்குத் தெரு மட்டுமே பேவர் பிளாக் ரோடும் வாறுகால் கட்டப்பட்டுள்ளது. மற்ற தெருக்கள் முறையான ரோடு வசதி இன்றி குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இங்கு பொது சுகாதார வளாகமும் இ சேவை மைய கட்டடமும் காட்சி பொருளாக உள்ளன. இதனால் அரசு நிதி வீணாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ