மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
13 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
13 hour(s) ago
திருச்சுழி: திருச்சுழி ஊராட்சி நிர்வாகம் சரிவர செயல்படாததால், நிர்வாக நலன் கருதி மாவட்ட கலெக்டர் திருச்சுழி ஊராட்சி தலைவர் பஞ்சவர்ணத்தின் செக் பவர், நிதி பரிவர்த்தனைகளில் கையொப்பம் இடும் அதிகாரத்தை பறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்க உத்தரவிட்டார்.அனைத்து கிராம ஊராட்சிகளின் நிதி நிர்வாகத்தினை எளிமைப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சிகள் கணக்குத் திட்டம் மூலம் அனைத்து ஊராட்சிகளில் பராமரிக்கப்பட்டு வரும் கணக்கு எண் 1, 7 ஆகியவற்றை பிப். 29க்குள் கணக்கை முடித்து, டி.என்.பாஸ்., செயலி மூலம் இயக்க அனைத்து ஊராட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.ஆனால் திருச்சுழி ஊராட்சியில் மட்டும் கணக்கை முடிக்காமல் ஊராட்சி செயலர், ஊராட்சி தலைவர் ஆகியோர் அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை.திருச்சுழி ஊராட்சியின் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்துடன் ஊராட்சி தலைவர் பஞ்சவர்ணத்தை செயல்பட விடாமல் அவருடைய கணவர் குமார் நிர்வாகத்தில் தலையீடு செய்து வருவதாகவும், நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஊராட்சி செயலர் பாக்கியத்தை பணி ஏற்க விடாமல் தடுத்து வருவதாகவும், ஊராட்சியின் பணிகள், பதிவேடுகள் பராமரித்தல் போன்ற பணிகள் தடைபட்டு வருவதாகவும், பொதுமக்கள் பாதிக்கப்படும் வகையில் மத்திய மாநில அரசின் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த விடாமல் தடுத்து வருவதாகவும் திருச்சுழி வட்டார வளர்ச்சி அலுவலரிடமிருந்து அறிக்கை கலெக்டருக்கு அனுப்பப்பட்டது.இதையடுத்து, கலெக்டர் ஜெயசீலன் ஊராட்சி தலைவரின் பண பரிவர்த்தனைகளில் முதன்மை கையொப்பமிடும் அதிகாரமானது, ஊராட்சி தலைவருக்கு பதிலாக வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) வழங்கிட உத்தரவிட்டார்.
13 hour(s) ago
13 hour(s) ago