உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நரிக்குடி வாரச் சந்தைக்கு இடம் ஒதுக்க வியாபாரிகள் எதிர்பார்ப்பு

நரிக்குடி வாரச் சந்தைக்கு இடம் ஒதுக்க வியாபாரிகள் எதிர்பார்ப்பு

நரிக்குடி: நரிக்குடியில் வாரச்சந்தைக்கு இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.நரிக்குடியை சுற்றியுள்ள கிராமத்தினர் பல்வேறு தேவைகளுக்காக நரிக்குடி வந்து செல்கின்றனர். இங்குள்ள வார சந்தைக்கு ஏராளமானோர் பொருட்கள் வாங்க வந்து செல்வர். இடவசதி இல்லாததால் பஸ் ஸ்டாண்ட் அருகே முத்தனேரி ரோட்டில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரோட்டில் வைத்து விற்பனை செய்கின்றனர். குறுகிய பகுதியாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் நின்று, நிதானமாய் வாங்குவதற்கு கூட போதிய இட வசதி இல்லை.அந்த வழித்தடத்தில் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இரு புறமும் காய்கறிகள் வைத்திருப்பதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுவதுடன், போக்குவரத்து இடையூறாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நரிக்குடியில் வார சந்தைக்கு ஏற்ற அரசு இடத்தை தேர்வு செய்து, அனைத்து வசதிகளை ஏற்படுத்த, உள்ளாட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை