மேலும் செய்திகள்
மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
14-Sep-2024
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் இந்திரா நகரில் மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று மதியம் 3:45 மணிக்கு மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இந்திரா நகர் பஸ் ஸ்டாப் அருகே இருந்த ஒரு புளிய மரம் திடீரென முறிந்து விழுந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் 25 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்துார் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, மரத்தினை அப்புறப்படுத்தினர். பின் போக்குவரத்து சீரானது.
14-Sep-2024