வியாபாரிகளிடம் மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது
காரியாபட்டி : வியாபாரிகளை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். மல்லாங்கிணரில் வாரந்தோறும் சந்தை நடைபெற்று வருகிறது. சுற்றியுள்ள கிராமத்தினர் ஏராளமானோர் காய்கறிகள் வாங்க கூட்டமாக வந்து செல்வர். இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த சந்தையில், கூட்டத்தை பயன்படுத்தி வியாபாரிகளிடம் ரூ. 100 கொடுத்து பொருட்கள் வாங்கி, ரூ. 500கொடுத்தாக இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் பிடித்து சென்று விசாரித்ததில், உசிலம்பட்டி அயன் கோவில் பட்டியைச் சேர்ந்த லெனின் மார்க் கேஸ் 43, ராஜேஷ் பாண்டி 35 என தெரிந்தது.இதுபோன்று பல்வேறு இடங்களில் கூட்டமாக இருக்கும் சமயத்தில் வியாபாரிகளின் கவனத்தை திசை திருப்பி, ஏமாற்றி மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனர். இருவரையும் மல்லாங்கிணர் போலீசார் கைது செய்தனர்.