உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் சீல் வைத்த ஆலையில் அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பு

சிவகாசியில் சீல் வைத்த ஆலையில் அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பு

சிவகாசி: சிவகாசி சுப்பிரமணியன் கோயில் தெருவை சேர்ந்தவர் நீராத்திலிங்கம். இவருக்கு சொந்தமாக போடு ரெட்டியாப்பட்டியில் ரங்கா பட்டாசு ஆலை உள்ளது.இங்கு 2023 நவ. 10ல் ஆய்வு செய்த அதிகாரிகள் ஆலை விதி மீறி இயங்கியதாக அதன் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர். உரிமம் புதுப்பிக்க நீராத்திலிங்கம் விண்ணப்பித்த நிலையில் 2024 ஜூலை 6 ல் சப் கலெக்டர் ப்ரீயா ரவிச்சந்திரன் ஆய்வு செய்தபோது, அங்கு அதிகப்படியான தொழிலாளர்களை வைத்து பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்து, மணி மருந்தை தரையில் உலர வைத்ததை கண்டறிந்து, ஆலைக்கு சீல் வைத்தார்.இந்நிலையில் தற்காலிக பணி நிறுத்தம் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்ட இந்த ஆலையில் நீராத்தி லிங்கம் சட்டத்திற்கு புறம்பாக உள்ளே நுழைந்து ராக்கெட், குருவி, 60 ஷாட் வெடி மற்றும் மணி மருந்தை தரையில் உலர வைத்திருந்தார்.மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து நீராத்துலிங்கத்தை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை