மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
19 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
19 hour(s) ago
விருதுநகர் : செயல்படாத நிலையில் வீடற்றவர்களுக்கான வாழ்விடம் கட்டடம், வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு துார்நாற்றம் வருவதால் சுகாதார சீர்கேடு, தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களால் ரோட்டில் செல்ல முடியாத நிலை என விருதுநகர் 29 வது வார்டு மணிநகரம் பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.விருதுநகரின் 29 வது வார்டில் மணி நகரம், சவுந்திர பாண்டியன் ரோடு, எப்.எப்., ரோடு, அல்லம்பட்டி ரோடு ஆகிய பகுதிகள் உள்ளது. இதில் மணி நகரம் பகுதியில் சவுந்திர பாண்டியன் தெருவில் வீடற்றவர்களுக்கான வாழ்விட கட்டடம் ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்டது. அதில் ரூ.8.60 லட்சம் செலவில் கூடுதல் வசதிகள் செய்தல் பணிகளும் செய்யப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால் இந்த கட்டடம் கடந்த ஒராண்டாக செயல்படுத்தப்படாமல் பூட்டியே கிடக்கிறது.இப்பகுதியில் வாறுகால்களை சுத்தம் செய்யும் போது வெளியே எடுத்து வைக்கப்படும் குப்பையை முறையாக அகற்றுவதில்லை. இங்குள்ள கல்யாண மண்டபத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரில் மீதமான உணவுகளும் சேர்த்து வெளியேற்றப்படுவதால் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாறுகாலில் புழுக்கள் உண்டாகி துார்நாற்றம் வீசி நோய்பரவும் அபாயம் உள்ளது.நாய்த்தொல்லையால் மக்கள் சிரமப்படுகின்றனர். அரசு மருத்துவமனையில் இருந்து அருப்புக்கோட்டை ரோட்டிற்கு செல்லும் ரோட்டில் பாதாளச்சாக்கடை அடைப்பு அடிக்கடி ஏற்படுகிறது. கல்லுாரி ரோட்டில் இருந்து கற்குவேல் அய்யனார் கல்யாண மண்டபம் செல்லும் ரோடு சேதமாகி உள்ளது.
19 hour(s) ago
19 hour(s) ago