| ADDED : மே 22, 2024 07:39 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் வள்ளுவர் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சிவகுமரன் கூறியதாவது;ஸ்ரீவில்லிபுத்தூரில் நல்லாசிரியர் கொன்றையாண்டி- பத்திரகாளியம்மன் அறக்கட்டளை சார்பில் துவக்கப்பட்ட வள்ளுவர் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.2004ல் குறைந்த எண்ணிக்கை மாணவர்களுடன் கொண்டு துவக்கப்பட்ட எங்கள் பள்ளியில் இன்று ஆயிரம் மாணவர்கள் படிக்கும் களமாக தரம் உயர்ந்து, இன்று கல்வி பணியில் கால் நூற்றாண்டை நோக்கி பயணிக்கிறது. பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு பணி, பெற்றோரின் ஒத்துழைப்புடன் ஆண்டுதோறும் அரசு பொது தேர்வுகளில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.எங்கள் பள்ளியில் ஜே.இ.இ., ஐ.ஐ.டி., நேட்டா போன்ற நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு மாணவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். மத்திய, மாநில அரசு நடத்தும் ஸ்காலர்ஷிப் தேர்வில் வெற்றி பெறுவதற்காக மாணவர்களுக்கு பவுண்டேஷன் வகுப்புகள் நடத்தப்படுகிறது.மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, காற்றோட்டமான வகுப்பறை, சுகாதாரமான கழிவறை வசதி, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள், நவீன மயமாக்கப்பட்ட ஆய்வறைகள் உட்பட பல சிறப்பு அம்சங்கள் எங்கள் பள்ளியில் உள்ளது, என்றார்.