மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
8 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
8 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டியில் இருந்து சத்திரப்பட்டி வரையுள்ள ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் ஆக்கிரப்புகளை முழு அளவில் அகற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டியில் இருந்து மொட்டமலை வழியாக சத்திரப்பட்டி வரையுள்ள ரோட்டில் நூல் மில்கள், பேண்டேஜ் கம்பெனிகள், கல்வி நிறுவனங்கள், போலீஸ் பட்டாலியன் குடியிருப்புகள் உள்ளன. இதனால் இந்த ரோட்டில் தினமும் டூவீலர்கள் முதல் கனரக வாகனங்கள் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் பயணித்து வருகிறது.ரோடு போதிய அகலம் இன்றி குறுகலாக உள்ள நிலையில், இருபுறமும் ஆக்கிரப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் எதிரும், புதிருமாக வரும் கனரக வாகனங்கள் எளிதில் செல்ல முடியவில்லை.குறிப்பாக வன்னியம்பட்டி டாஸ்மாக் கடை அருகில் லட்சுமியாபுரம் வளைவு பகுதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதாலும் எளிதில் பஸ்கள் வந்து செல்ல முடியவில்லை.வன்னியம்பட்டி- சத்திரப்பட்டி ரோட்டில் முழு அளவில் ஆக்கிரப்புகளை அகற்ற, அரசுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.
8 hour(s) ago
8 hour(s) ago