உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆமை - முயல் கதை போல் ஆகிவிடுமோ.. அ.தி.மு.க.,வினர் கிலி

ஆமை - முயல் கதை போல் ஆகிவிடுமோ.. அ.தி.மு.க.,வினர் கிலி

விருதுநகர் : விருதுநகர் லோக்சபா தொகுதியில் பா.ஜ., ராதிகா, காங். மாணிக்கம் தாகூர், தே.மு.தி.க., விஜயபிரபாகரன் என மும்முனை போட்டி நடக்கிறது. இதில் தே.மு.தி.க., விஜயபிரபாகரன் இன்னும் நிறைய களப்பணி செய்ய வேண்டிய நிலையில், அ.தி.மு.க., வார்டு செயலாளர்கள், கிளை பிரதிநிதிகள் பலர் அவர் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், விஜயகாந்த் மகன் என்பதாலும் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக நினைத்துள்ளனர். இந்த மிதப்பில் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்காமல் ஓய்வில் துாங்குகின்றனர்.வேட்பாளர் வரும் போது மட்டும் உடன் நின்று பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ளதால் புது முகமாக போட்டியிடும் விஜயபிரபாகரனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய அ.தி.மு.க.,வினர் வெற்றி வாய்ப்பு பிரகாசம் என்ற கனவில் உள்ளதால் ஆமை - முயல் கதை போலாகி விடுமோ என கட்சியின் மூத்த நிர்வாகிகள் புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ