உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பஸ்சில் தனியாகச் செல்லும் மூதாட்டிகளை குறி வைத்து நகை திருடும் பெண்கள்

பஸ்சில் தனியாகச் செல்லும் மூதாட்டிகளை குறி வைத்து நகை திருடும் பெண்கள்

சிவகாசி, : சிவகாசி பகுதியில் பஸ்சில் தனியாகச் செல்லும் மூதாட்டிகளை குறிவைத்து நகை திருடும் பெண்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.சிவகாசி பூவநாதபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் கோசலை 65. இவர் அனுப்பன்குளத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் பூவநாதபுரம் வருவதற்காக சுந்தர்ராஜபுரம் பஸ் ஸ்டாப்பில் அரசு பஸ்சில் ஏறி சீட்டில் அமர்ந்தார். இவரின் அருகில் அமர்ந்திருந்த பெண் கோசலையிடம் உங்கள் கழுத்தில் உள்ள தங்கச் செயின் அறுந்துள்ளது என்று கூறினார்.அதற்கு கோசலை செயின் அறுந்து போகவில்லை என்று கூறிய நிலையில் அந்தப் பெண் செயினை கழட்டி பையில் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அவர் தான் கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் தங்கச் செயினை கழற்றி பர்சில் வைத்திருந்தார். பஸ் ஸ்டாண்ட் இறங்கி பர்சை பார்த்த போது செயின் மாயமானது தெரிய வந்தது. செயினை திருடிய பெண்ணை டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.நான்கு நாட்களுக்கு முன்பு இதேபோல் பஸ்சில் வந்த மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து அருகில் நின்றிருந்த இரு பெண்கள் 7 பவுன் தங்கச்செயினை திருடி தப்பினர். இந்நிலையில் அதேபோல் மீண்டும் மூதாட்டியிடம் திருடப்பட்டுள்ளது. மூதாட்டிகளை குறிவைத்து திருடும் பெண்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ