உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  காரியாபட்டியில் நாய்கள் கடித்து 10 பேர் காயம்

 காரியாபட்டியில் நாய்கள் கடித்து 10 பேர் காயம்

காரியாபட்டி: காரியாபட்டியில் தனியார் கல்லூரி மாணவிகள் உட்பட 10க்கும் மேற்பட்டவர்களை நாய்கள் கடித்ததில் காயமடைந்தனர். காரியாபட்டியில் நேற்று தனியார் கல்லூரி மாணவிகள் மாலை வீடு திரும்ப மந்திரி ஓடை பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தனர். அப்போது, அங்கு சுற்றி திரிந்த நாய்கள் 4 மாணவிகள், பெரியவர் ஒருவரை கடித்தது. அதே போல் ஆவியூர், டி.வேப்பங்குளம், வக்கணாங்குண்டு உள்ளிட்ட கிராமங்களில் 5க்கும் மேற்பட்டவர்களை நாய்கள் கடித்தன. காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர். நாய்களை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை