உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  நாய்கள் கடித்து 13 ஆடுகள் உயிரிழப்பு

 நாய்கள் கடித்து 13 ஆடுகள் உயிரிழப்பு

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆட்டு தொழுவத்திற்குள் புகுந்த நாய்கள் கடித்ததில் 13 ஆடுகள் இறந்தன. தளவாய்புரம் அடுத்த ஜமீன் கொல்லங் கொண்டானை சேர்ந்த விவசாயி பாண்டி 51, ஆடுகள் வளர்த்து விற்பனை செய்கிறார். கடந்த வாரம் வாங்கி வந்த 16 ஆடுகளை வீட்டின் அருகே தொழுவத்தில் அடைத்து விட்டு துாங்க சென்றார். நேற்று அதிகாலை 1:30 மணி அளவில் ஆடுகள் சத்தமிடுவதை கேட்டு தொழுவத்திற்கு வந்து பார்த்தார். இதில் 5க்கும் அதிகமான நாய்கள் தொழுவத்தின் கம்பி வளைக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறிக் கொண்டிருந்தன. கம்பி எடுத்து நாய்களை விரட்டினார். இருப்பினும் 13 ஆடுகள் கழுத்து வயிறு உள்ளிட்ட பகுதிகளில் கடிபட்டு உயிரிழந்தன. மூன்று ஆடுகள் உயிருக்கு போராடின. அவற்றிற்கு சேத்துார் கால்நடை உதவி மருத்துவர் கார்த்திக் சிகிச்சை அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ