| ADDED : நவ 19, 2025 07:52 AM
காரியாபட்டி: காரியாபட்டி ஆவியூரில் தெரு நாய்கள் கடித்து 15 பேர் காயமடைந்தனர். உடனடியாக 58 நாய்களை ஊராட்சி நிர்வாகம் பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்தது. காரியாபட்டி ஆவியூரில் நேற்று முன்தினம் பஜாரில் சுற்றித்திரிந்த 3 வெறிபிடித்த நாய்கள் கடித்ததில், மணிகண்டன், தங்கப்பாண்டி, தனலட்சுமி, ஆறுமுக கணபதி, கருப்பையா, கனிஷ்கா, பாப்பாத்தி, பாலமுருகன், தங்கம், கார்மேகம், மாரியப்பன் உட்பட பலர் பலத்த காயம் ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும் பலரை கடிக்க முற்பட்டது. உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நாய் பிடிப்பவர்களை வரவழைத்து நோய் வாய்ப்பட்ட, வெறி பிடித்த 58 நாய்களை பிடித்து அவனியாபுரம் நாய்கள் காப்பகத்தில் விடப்பட்டன. மேலும் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.