உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்டத்தில் ஒரு மாதத்தில் 1802 பேருக்கு நாய்க்கடி

மாவட்டத்தில் ஒரு மாதத்தில் 1802 பேருக்கு நாய்க்கடி

சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் ஒரு மாதத்தில் மட்டும் 1802 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தெரு நாய் தொல்லை உள்ள பகுதிகளில் தெருக்களில் நடந்து செல்லும் போது எச்சரிக்கையோடு கவனத்தோடு இருக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். சிவகாசி அருகே நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர் ஜெயசீலன், நாய்க்கடி தடுப்பூசி இருப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நாரணாபுரம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 46 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்குரிய தடுப்பூசி உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மார்ச் மாதத்தில் மட்டும் 1802 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனவே தெரு நாய் தொல்லை உள்ள பகுதிகளில் தெருக்களில் நடந்து செல்லும் போதும், குழந்தைகள் தெருவில் விளையாடும் போதும் மிகுந்த எச்சரிக்கையோடும் கவனத்தோடும் இருக்க வேண்டியது அவசியம். நாய்க்கடி பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடி தடுப்பு மருந்து இருப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை