மேலும் செய்திகள்
மக்கள் நீதிமன்றத்தில் 2604 வழக்குகளுக்கு தீர்வு
15-Dec-2024
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2878 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.14 கோடிக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டது.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சிவகாசி, சாத்துார், ராஜபாளையம், காரியாபட்டி, வத்திராயிருப்பு நகரங்களில் வட்ட சட்ட பணி குழுக்கள் சார்பாகவும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.இதில் நிலுவையில் இருந்த சிவில், கிரிமினல், வாகன விபத்து சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி வராக் கடன்கள் மற்றும் சிறு வழக்குகள் உட்பட 5 ஆயிரத்து 234 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, அதில் 2 ஆயிரத்து 878 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.14 கோடியே 9லட்சத்திற்கு உத்தரவுகள் வழங்கப்பட்டது.இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட சுப்புலட்சுமிக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு தொகை சமரசமாக பேசி முடிக்கப்பட்டு அதற்கான தீர்வு நகலை முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், தன்னார்வ சட்டப் பணியாளர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி கவிதா தலைமையில் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர்.
15-Dec-2024