மேலும் செய்திகள்
கஞ்சா விற்றவர் கைது
05-Jan-2025
திருச்சுழி: திருச்சுழி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.திருச்சுழி அருகே பனையூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் திருச்சுழி எஸ்.ஐ., வீரணன் தலைமையில் போலீசார் வந்த போது, அங்கு பைக்கில் 3 இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். போலீசை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் திருச்சுழி அருகே நெல்லி குளத்தைச் சேர்ந்த விமல்ராஜ், 19, பனையூரைச் சேர்ந்த அய்யனார், 22, வல்லரசு, 23, என்பதும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து மாணவர்களுக்கு விற்க வைத்திருந்த 60 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்து, போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
05-Jan-2025