ரேஷன் துவரம் பருப்பு 3,200 கிலோ பறிமுதல்
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தாசில்தார் மற்றும் உணவுப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சரக்கு வாகனம் ஒன்றை சோதனையிட்ட போது, அதில், 3,200 கிலோ ரேஷன் துவரம் பருப்பு, 60 மூட்டைகளில் இருந்தது. பின் அது பறிமுதல் செய்யப்பட்டது. பருப்பை துாத்துக்குடி யில் இருந்து விருதுநகருக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது.