உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அம்ரித் பாரத் திட்டத்தில் பணிகள் முடிந்த 4 ரயில்வே ஸ்டேஷன்கள்

அம்ரித் பாரத் திட்டத்தில் பணிகள் முடிந்த 4 ரயில்வே ஸ்டேஷன்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்:அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ஸ்ரீவில்லிபுத்துார், சோழவந்தான், காரைக்குடி, மணப்பாறை ரயில்வே ஸ்டேஷன்கள் இம்மாத இறுதியிலோ, அக்டோபர் முதல் வாரத்திலோ மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 1275 ரயில் நிலையங்கள் புனரமைக்கும் பணி 2023 பிப்ரவரியில் துவங்கப்பட்டது. தமிழகத்திலும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மதுரை கோட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், விருதுநகர், திண்டுக்கல், பழநி, காரைக்குடி, மணப்பாறை, பரமக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்செந்துார், திருநெல்வேலி, தென்காசி, அம்பாசமுத்திரம், துாத்துக்குடி, கோவில்பட்டி, மதுரை, சோழவந்தான் ஆகிய ரயில் நிலையங்களை தரம் உயர்த்தும் பணிகள் நடக்கின்றன. இதில் ஸ்ரீவில்லிபுத்துார், சோழவந்தான், காரைக்குடி, மணப்பாறை ஆகிய நான்கு ஸ்டேஷன்களில் பணிகள் முடிவடைய உள்ளன. இவற்றை இம்மாத இறுதியிலோ அல்லது அக்டோபர் மாதம் முதல் வாரத்திலோ மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ