41 மணி நேரம் தொடர் நாம சங்கீர்த்தன பூஜை
ராஜபாளையம்: ராஜபாளையம் சொக்கர் கோயில் வளாகத்தில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் 41 மணி நேரம் தொடர் நாம சங்கீர்த்தன பஜனை நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 6:00 மணி முதல் நேற்று இரவு 11:00 மணி வரை நகர் பகுதி சுற்றியுள்ள 21 ஐயப்ப பக்தர்கள் சார்பில் நடைபெற்றது. முன்னதாக ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் செய்யப்பட்டது. புஷ்ப அலங்காரத்தில் காட்சி தந்த ஐயப்பனுக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டன. ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட ஐயப்ப பக்தர்கள் தொடர்ந்து பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ததுடன் நாம சங்கீர்த்தன பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை ராஜபாளையம் சொக்கர் கோயில் ஐயப்பன் பஜனை குழு, பெண்கள் பஜனை குழு செய்திருந்தனர்.