உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்டத்தில் புதிதாக 43 தானியங்கி மழை மானிகள், 2 வானிலை மையங்கள்

மாவட்டத்தில் புதிதாக 43 தானியங்கி மழை மானிகள், 2 வானிலை மையங்கள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 43 தானியங்கி மழைமானிகள், 2 வானிலை மையங்கள் அமைய உள்ளன.மாவட்டத்தில் தற்போது 12 இடங்களில் மழைமானிகள் செயல்பட்டு வருகின்றன. தினசரி பதிவாகும் மழை அளவை இந்த மழைமானிகள் மூலம் அளவீடு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.இதில் ஏற்படும் காலதாமதம் அறிவியல் பூர்வமான வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு புதிதாக 43 தானியங்கி மழைமானிகளும், 2 தானியங்கி வானிலை மையங்களும் பேரிடர் மேலாண்மையின் கீழ் அமைக்க முடிவெடுக்கப்பட்டு மார்ச் 1 முதல் கட்டுமானப்பணிகள் துவக்கப்பட உள்ளன.விருதுநகர்-4, அருப்புக்கோட்டை-5, காரியாபட்டி-5, திருச்சுழி-7, ராஜபாளையம்-4, ஸ்ரீவில்லிபுத்துார்-4, வத்திராயிருப்பு-3, சிவகாசி-4, சாத்துார் -5, வெம்பக்கோட்டை-2 என மழைமானிகள் அமைய உள்ளது.2024 வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் இவை அனைத்தும் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 43 தானியங்கி மழைமானிகளில் நான்கு அதிக மழைப்பொழிவை கொண்டிருக்கும் மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதிகளில் அமைய உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை