உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 176 மையங்களில் குரூப் 4 தேர்வு 49 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

176 மையங்களில் குரூப் 4 தேர்வு 49 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் இன்று குரூப் 4 தேர்வு 176 மையங்களில் 49 ஆயிரத்து 454 பேர் எழுதுகின்றனர்.தமிழகம் முழுவதும்குரூப் 4 தேர்வு இன்று (ஜூலை 12) நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு பணியில் சேர துடிப்போருக்கு குரூப் 4 தேர்வு சிறந்த நுழைவு வாயிலாக உள்ளது. இந்தாண்டு அறிவிப்பு வெளியிட்ட நிலையில் பல ஆண்டுகளாக தயாரானவர்கள், மும்முரம் காட்டினர். இந்த தேர்வை பொறுத்தமட்டில் கல்லுாரி மாணவர்களில் இருந்து 30 வயதுக்கும் மேற்பட்டவர்கள், 40 வயது பெண்கள் வரை தேர்வெழுதுவர்.மாவட்டத்தில் 176 மையங்களில் 49 ஆயிரத்து 454 பேர் எழுதுகின்றனர். 34நடமாடும் கண்காணிப்பு குழுக்கள் கண்காணிக்கின்றன. 10 பறக்கும் படைகள், 20 வீடியோகிராபர்கள் குழுக்கள் முழுநேர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். தேர்வை முன்னிட்டு காலை நேரங்களில் சிறப்பு பஸ் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.தேர்வர்கள் ஹால் டிக்கெட் உடன் தேர்வு நேரத்திற்கு முன்னதாக செல்ல மாவட்ட நிர்வாகத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ