உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நகை திருடிய 5 பேர் கைது

நகை திருடிய 5 பேர் கைது

ராஜபாளையம்,:ராஜபாளையத்தில் இருந்து சென்ற பஸ்ஸில் இரு வேறு சம்பவங்களில் நகை திருட்டில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜபாளையத்திலிருந்து பஸ்களில் கடந்த மாதம் 17ம் தேதி சென்ற முறம்பை சேர்ந்த ஓய்வு ஆசிரியை கிருபை மற்றும் ராஜலட்சுமியிடம் இருந்து தனித்தனியாக 6 பவுன் தங்க சங்கிலி திருடு போனது. தெற்கு போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் இதில் ஈடுபட்டவர்களை தேடினர். நெல்லை மாவட்டம் அழகியபாண்டியபுரம் அருகே சிவஞான புரத்தை சேர்ந்த கவுரி 40, நந்தினி 30, படையப்பா 28, ஆகியோரை இரண்டு நாள் முன் கைது செய்து சிறையில் அடைத்தனர். கவுரியின் கணவர் இசக்கி 45, அவரது 16 வயது மகனை போலீசார் தேடிய நிலையில் அவரது வீட்டில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை