உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இரு நாட்களில் 9 பேர் மாயம்

இரு நாட்களில் 9 பேர் மாயம்

விருதுநகர் : மாவட்டத்தில் கடந்த இரு நாட்களில் மட்டும் பெண்கள், சிறுவர்கள் உட்பட 9 பேர் மாயமாகியுள்ளனர். இவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.விருதுநகர் உலகநாதன் தெருவைச் சேர்ந்தவர் அழகுமுத்து 32. இவர் மனைவி மலர்கொடி 31, மகன் மித்துராகவன் 3. அழகுமுத்து வேலைக்கு சென்று விட்டு ஜன. 18 இரவு 9:30 மணிக்கு வந்து பார்த்த போது மனைவி, மகனை காணவில்லை.இதே போல் இருக்கன்குடி கே. மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் .இவர் மனைவி கனகஜோதி, 23 . மகள் தனிஷா ஸ்ரீ , 4. மகன் சபரி பாண்டி, 1. ஜன.29ல் குழந்தைகளுடன் வெளியே சென்ற கனகஜோதி மாயமானார்.விருதுநகர் எத்திலப்பன்பட்டியைச் சேர்ந்தவர் சுவேதா 20. இவர் விருதுநகரில் பி.எஸ்.சி., இரண்டாமாண்டு படித்து வருகிறார். ஜன. 29 மாலை 6:00 மணிக்கு கல்லுாரியிலிருந்து வீட்டிற்கு வர வேண்டியவர் இரவு 8:00 மணி ஆகியும் வரவில்லை.சிவகாசி செல்லையா நாயக்கன் பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கோடீஸ்வரி 19. பட்டாசு தொழிலாளியான இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. சிவகாசி எரிச்சநத்தம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த 17 வயது சிறுமி பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தவர் மாயமானார். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.------* சிவகாசி லிங்கபுரம் காலனியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சிவகாசியில் உள்ள பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தார். காலில் ஏற்பட்ட காயத்தினால் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில் அவரது தாயார் பள்ளிக்கு போகச் சொல்லி வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டிலிருந்த சிறுவன் மாயமானார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர். -----இரு நாட்களில் மாவட்டத்தில் 9 பேர் மாயமானது போலீசாருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி