மேலும் செய்திகள்
மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2850க்கு விற்பனை
04-Oct-2024
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சாத்துார், அருப்புக்கோட்டை ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் பாசிப்பயறு கொள்முதல் செய்யப்படவுள்ளது என விற்பனைக்குழு செயலாளர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது: பாசிப்பயறு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பயன்பெற ஒரு கிலோ ரூ. 86.82 என்ற குறைந்தபட்ச ஆதார விலையில் விற்பனைக்குழுவின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மத்திய அரசு நிறுவனம் மூலம் கொள்முதல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.சாத்துார், அருப்புக்கோட்டை விற்பனைக்கூடங்களுக்கு தலா 150 மெ.டன் வீதம் 300 மெ.டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் டிச. 23 வரை செயல்படுத்தப்படவுள்ளது.விவசாயிகளுக்கு உரிய தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு சாத்துார் கண்காணிப்பாளர் 04562 - 260410, 90033 56172, அருப்புக்கோட்டை மேற்பார்வையாளர் 04566 -220225, 82483 69001 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம், என்றார்.
04-Oct-2024