உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி பஸ் ஸ்டாப் அருகில் திறந்த நிலையில் வாறுகால்

பள்ளி பஸ் ஸ்டாப் அருகில் திறந்த நிலையில் வாறுகால்

சிவகாசி சிவகாசியில் பள்ளி, பஸ் ஸ்டாப் அருகே இடிந்து திறந்த நிலையிலுள்ள வாறுகாலினால் மாணவர்கள், வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.சிவகாசி சேர்மன் சண்முக நாடார் ரோட்டில் 3 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளைவில் சுற்றுச் சுவரை ஒட்டி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் வாறுகால் உள்ளது. இந்த இடம் பஸ் ஸ்டாப்பாகவும் உள்ளது. இந்நிலையில் பஸ் ஸ்டாப் அருகே வாறுகால் சேதமடைந்து திறந்த நிலையில் உள்ளது. இதில் இருக்கும் கம்பிகள் ரோடு வரை நீட்டிக் கொண்டு இருக்கின்றது. அனைத்து மாணவர்களும் இதனை கடந்து தான் செல்ல வேண்டும்.மேலும் இதன் அருகிலேயே பஸ் ஸ்டாப் உள்ளதால் பஸ்சிற்காக காத்திருக்கும் மக்கள், மாணவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். டூவீலர், சைக்கிளில் செல்பவர்கள், சிறிது கவனம் சிதறினாலும் வாறுகாலில் விழ வாய்ப்புள்ளது.மேலும் இப்பகுதியில் எந்நேரமும் போக்குவரத்து நிறைந்திருக்கும். வளைவு பகுதி என்பதால் கொஞ்சம் கவனம் சிதறி தவறி விழுந்தால் கம்பிகளால் பெரிய அசம்பாவிதம் ஏற்படும். எனவே வாறுகாலில் மூடி அமைத்து சீரமைக்க வேண்டும் என மாணவர்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ